இளையராஜாவுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து..!

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இசைஞானி ' பத்ம விபூஷன்' திரு.இளையராஜா அவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள் என டிடிவி தினகரன் ட்வீட்.

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இசைஞானி ‘ பத்ம விபூஷன்’ திரு.இளையராஜா அவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள் என டிடிவி தினகரன் ட்வீட்.

இசையமைப்பாளர் இளையராஜா,பி டி உஷா, வீரேந்திர ஹெக்கடே மற்றும்  வி.விஜயேந்திர பிரசாத் ஆகியோர்  மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக  அறிவிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், டிடிவி தினகரன் அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இசைஞானி ‘ பத்ம விபூஷன்’ திரு.இளையராஜா அவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்ச் சமூகத்தின் போற்றத்தக்க ஆளுமைகளில் ஒருவரான திரு.இளையராஜா அவர்களின் நாடாளுமன்றப் பணி அனைவரும் பெருமை கொள்ளத்தக்க வகையில் அமையட்டும்.’ என பதிவிட்டுள்ளார்.