மச்சான்ஸ் தாமரைக்கு ஓட்டு போட்டுருங்க...! கோவையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நமீதா...!

கோவை தெற்கு தொகுதியில், பாஜக சார்பில், போட்டியிடும் வானதி சீனிவாசனை ஆதரித்து நடிகை நமீதா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கோவை தெற்கு தொகுதியில், பாஜக சார்பில், போட்டியிடும் வானதி சீனிவாசனை ஆதரித்து நடிகை நமீதா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தமிழகத்தில் ஏப்.6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. இதனையடுத்து, அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவை தெற்கு தொகுதியில், பாஜக சார்பில், வானதி சீனிவாசன் அவர்கள் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நடிகை நமீதா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கு கூடியிருந்தவர்கள், வத்தி காம்மிங் பாடலுக்கு நடனமாடிய நிலையில், அவர்களுடன் இணைந்து  நடனமாடினார். அதனை தொடர்ந்து, பரப்புரை செய்த அவர், ‘மச்சான் தாமரைக்கு ஓட்டு போட்டுருங்க’ என தெரிவித்தார்.

மச்சான்ஸ் தாமரைக்கு ஓட்டு போட்டுருங்க...! கோவையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நமீதா...!