சிகிச்சை பெற்று வரும் ரஜினியிடம் உடல்நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின்

Dravida Munnetra Kazhagam Chief M.K.Stalin asked about Super Star Rajinikanth health condition via Phone .

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்திடம் மு.க ஸ்டாலின் நலம் விசாரித்துள்ளார்.

அண்ணாத்த படப்பிப்பில் கலந்துகொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத் சென்றார்.படப்பிடிப்பின்போது பணியாளர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அப்பொழுது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது முடிவுகள் நெகட்டிவ் என வந்துள்ளது.

இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், ரத்த அழுத்தத்தில் மாறுதல் காரணமாக ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்ஹைதராபாத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்திடம் திமுக தலைவர் மு.கஸ்டாலின்தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார்.