கல்வி பட்டத்தை அரசியல் பிரச்சனையாக மாற்ற வேண்டுமா.? தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கருத்து.!

நாட்டில் பல்வேறு பிரச்சனைகளை நாம் சந்தித்து வரும்போது, யாருடைய கல்வி பட்டத்தையோ பற்றி பேசி அதனை அரசியல் பிரச்சினையாக மற்ற வேண்டுமா.? - சரத் பவார் கேள்வி.

நாட்டில் பல்வேறு பிரச்சனைகளை நாம் சந்தித்து வரும்போது, யாருடைய கல்வி பட்டத்தையோ பற்றி பேசி அதனை அரசியல் பிரச்சினையாக மற்ற வேண்டுமா.? – சரத் பவார் கேள்வி.

பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு குறித்த சர்ச்சையை எதிர்க்கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். அந்த விமர்சனம் குறித்து எதிர்கட்சிகளில் ஒன்றாக இருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் விமர்சித்து பேசியுள்ளார்.

கல்வி பட்டம் :

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பாவர் பேசுகையில், ‘ நாட்டில் வேலையின்மை, சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் பணவீக்கம் ஆகிய பல்வேறு பிரச்சனைகளை நாம் சந்தித்து வருகிறோம். இந்த சமயம் யாருடைய (பிரதமர் மோடி) கல்வி பட்டத்தை பற்றி பேசி அதனை அரசியல் பிரச்சினையாக மற்ற வேண்டுமா என விமர்சித்தார்.

அதானி – அம்பானி :

இதற்கு முன்னதாக, சரத் பவார் அதானி விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாட்டிற்கு எதிராக , நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன. அதனை விடுத்து அதானி, அம்பானி பற்றி பேசி அவர்களை குறிவைக்க வேண்டுமா கேட்டு இருந்தார் என்பது குறிபிடத்தக்கது.