பொள்ளாச்சியில் தடுத்து நிறுத்தம் ! கனிமொழி உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டம்

DMK MP Kanimozhi stopped and detained while attempting to protest against Pollachi sexual abuse scandal in pollachi.

போராட்டம் நடத்த பொள்ளாச்சி நோக்கி சென்ற திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில், குற்றவாளிகளை கைது செய்ய கோரி இன்று போராட்டம் அறிவித்து இருந்தது திமுக.ஆகவே போராட்டம் நடத்த பொள்ளாச்சி நோக்கி சென்ற திமுக எம்.பி. கனிமொழி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். ஈச்சனாரி அருகே கனிமொழி சென்ற வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள் .தடுத்து நிறுத்தப்பட்ட இடத்தில் கனிமொழி மற்றும் திமுகவினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,பொள்ளாச்சி பாலியல் வன்முறை கொடூரத்தை கண்டித்து இன்று திமுக சார்பாக நடைபெற இருக்கும் போராட்டத்திற்கு வரும் பெண்களையும் கழக தொண்டர்களையும் ஆங்காங்கே போலீசார் வழிமறித்து திருப்பி அனுப்புவதாக தகவல் வந்து கொண்டே இருக்கிறது.எங்கள் வாகனங்களையும் நிறுத்தினார்கள். போலீசாரின் இச்செயலை கண்டித்து சாலையில் அமர்ந்து போராட்டம் செய்ததாக  தெரிவித்துள்ளார்.

unknown node