பொள்ளாச்சி கொடூரம் : அனைவரும் கைது செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் – கனிமொழி

DMK MP Kanimozhi said Today, the perpetrators of Pollachi sexual harassment should be arrested at any height.

பொள்ளாச்சி பாலியல் கொடூரக் குற்றவாளிகள் எந்த உயரத்தில் இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில், குற்றவாளிகளை கைது செய்ய கோரி இன்று போராட்டம் அறிவித்து இருந்தது திமுக.அதன்படி, பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யக்கோரி தி.மு.க. எம்.பி. கனிமொழி தலைமையில்  போராட்டம் நடைபெற்றது.இந்த போராட்டத்தில் கனிமொழி பேசுகையில், பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படும் வரை போராட்டம் தொடரும்.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை விசாரிக்க தனிநீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும். பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் நியாயமான விசாரணையை நடத்த அரசு தயாரா?  என்று கேள்வி எழுப்பினார்.அருளானந்தத்தை அதிமுக காப்பாற்றியதற்கு காரணம் அவருக்கும் மேலே இருப்பவர்களை பாதுகாக்கத்தான்; பொள்ளாச்சி பாலியல் கொடூரக் குற்றவாளிகள் எந்த உயரத்தில் இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி கொடூரம் : அனைவரும் கைது செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் – கனிமொழி