விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக சார்பில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம்

A black flag protest on behalf of the DMK is being held in the district capitals at 10 am today in support of the struggling farmers in Delhi.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று காலை 10 மணிக்கு மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடைபெறுகிறது.

சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தற்போது டெல்லியில் ஹரியானா, பஞ்சாப் மற்றும் உத்திர பிரதேச விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது .இந்த கூட்டத்தில் திமுக சார்பில் கருப்பு கொடி ஏந்தி டிசம்பர் 5-ஆம் தேதி போராட்டம் நடைபெறுமென ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஆகவே  டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று காலை 10 மணிக்கு மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடைபெறுகிறது.சேலத்தில் நடைபெறும் போராட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.