ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம்.! திமுக கூட்டணி கட்சிகள் அறிவிப்பு.!

ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகளுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் வரும் 12ஆம் தேதி அடுத்த வாரம் புதன்கிழமை அன்று ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்த

ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகளுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் வரும் 12ஆம் தேதி அடுத்த வாரம் புதன்கிழமை அன்று ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்த உள்ளனர்.

நேற்று ஆளுநர் மாளிகையில் குரூப் 1 தேர்வெழுதும் மாணவர்கள் மத்தியில் பேசிய தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி பல்வேறு சர்ச்சை கருத்துக்களை கூறினார். ஒரு மசோதா நிறுத்திவைக்கப்பட்டால் அது நிராகரிக்கப்பட்டதாக அர்த்தம் என குறிப்பிட்டார்.

ஆளுநர் பேச்சு :

அதே போல, கூடங்குளம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்களுக்கு அந்நிய நாட்டில் இருந்து பணம் வந்ததாகவும் குற்றம் சாட்டினார்.  இந்த சர்ச்சை கருத்துக்களுக்கு தற்போது தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

12ஆம் தேதி போராட்டம் :

ஆளுநரின் இந்த கருத்துக்களுக்கு எதிராக வரும் 12ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடைபெறும் என திமுக கூட்டணியான மதசார்பற்ற கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் உரை :

அதில், ஆண்டின் தொடக்கத்திலேயே தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை வாசிக்காமல், ஆளுநர் ஆர்.என்.ரவி, பல பகுதிகளை நீக்கி சேர்த்து வாசித்தார். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 14 கோப்புகளுக்கு (ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவும் இதில் அடங்கும்) கையெழுத்திடாமல் இருக்கிறார் என்றும்,

ஸ்டெர்லைட் போராட்டம் :

மாணவர்களை சந்தித்து மசோதா நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்றால் ரத்து செய்யப்பட்டதாக அர்த்தம் என பேசியது, அவர் ஆளுநர் பதவி ஏற்றபோது எடுத்துக்கொண்ட ரகசிய காப்புக்கு எதிரானது என்றும் ஸ்டர்லைட் , கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடியவர்கள் அந்நிய நாட்டின் நிதியை பெற்றுக்கொண்டனர் என்று ஆளுநர் கூறியது குறித்தும் எதிர்ப்பு தெரிவித்து வரும் 12ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன்னர் போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணி கட்சிகள் :

இதில், திமுக சார்பில் டி.ஆர்.பாலு, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக தலைவர் வைகோ, கம்யூனிஸ்ட் தலைவர்கள் பாலகிருஷ்ணன், முத்தரசன், கூட்டணி கட்சிகளை சேர்ந்த காஜர் மைதீன், விசிக தலைவர் திருமாவளவன், வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் என 11 கூட்டணி கட்சி தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

போராட்டங்கள் தொடரும் :

அதில், சட்டமன்ற மாண்புகளை குழைக்கும் வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்துகொள்ளும் நடவடிக்கையை நிறுத்தும் வகையில் இந்த போராட்டங்கள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம்.! திமுக கூட்டணி கட்சிகள் அறிவிப்பு.!