மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக்குழு உறுப்பினராக துணை முதல்வர் மகன் தேர்வு.!

Ravindranath MP, son of the Deputy Chief Minister, has been selected as a member of the Executive Committee of the Madurai AIIMS Hospital.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக்குழு உறுப்பினராக துணை முதல்வரின் மகன் ரவீந்தர்நாத் எம்பி தேர்வாகியுள்ளார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக்குழு உறுப்பினர் பொறுப்புக்கு 3 பேர் விண்ணப்பித்த நிலையில், மதுரை எம்பி சு.வெங்கடேசன் விலகியதால் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்தர்நாத் குமார் எம்பி மற்றும் விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட 2 பேரை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி, மதுரை மாவட்டம் தோப்பூரில் ரூ.1,264 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியிருந்தார். அடிக்கல் நாட்டி 2 ஆண்டுகள் ஆகியும் மத்திய அரசு இதுவரை ரூ.12 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அதன் மூலம் சுற்றுச்சுவர் மட்டுமே அங்கு கட்டப்பட்டுள்ளது. அதை தவிர்த்து வேறு எந்த பணிகளும் இதுவரை நடைபெறவில்லை. கடன் தருவதில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை தாமதம் செய்வதாக மத்திய அரசு விளக்கம் அளித்திருந்தத நிலையில், தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக்குழு உறுப்பினராக ரவீந்தர்நாத், மாணிக்கம்தாகூர் தேர்வாகியுள்ளனர்.