#ElectionBreaking: போடியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பின்னடைவு..!

Deputy Chief Minister O. Panneerselvam backs down in Bodi constituency ..!

போடி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை விட குறைந்த எண்ணிகையிலான வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில்,போடி தொகுதியில் அதிமுக சார்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும்,திமுக சார்பாக தங்க தமிழ்ச்செல்வனும் போட்டியிட்டனர்.

இந்த சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது தமிழகம் முழுவதும் இன்று காலை 8 மணியிலிருந்து நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து,காலை 11 மணி நிலவரப்படி போடி தொகுதியில் போட்டியிட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் 6,414 வாக்குகளும்,திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் 6,538 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இதனால்,துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,திமுக வேட்பாளரான தங்க தமிழ்ச்செல்வனை விட 124 வாக்குகள் குறைவாகப் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.