சற்று முன்...டெல்லி சுகாதாரத்துறை அமைச்சருக்கு 14 நாட்கள் சிறைத்தண்டனை – நீதிமன்றம் போட்ட உத்தரவு!

ஹவாலா பணப்பரிமாற்றம் மற்றும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது உள்ளிட்ட பணமோசடி தொடர்பான வழக்கில் டெல்லி ஆம் ஆத்மி அரசின் சுகாதாரத்துறை அமைச்சர்

ஹவாலா பணப்பரிமாற்றம் மற்றும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது உள்ளிட்ட பணமோசடி தொடர்பான வழக்கில் டெல்லி ஆம் ஆத்மி அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர ஜெயின் கடந்த மே 30-ம் தேதி கைது செய்யப்பட்டார்.மேலும்,அவர் ஜூன் 9 வரை அமலாக்கத்துறை காவலில் வைக்கப்பட்டார்.

இதற்கிடையில்,டெல்லி மாநிலம் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரூ.2.82 கோடி ரொக்கம் பணம் மற்றும் 1.80 கிலோ எடையுள்ள 133 தங்க நாணயங்களை அமலாக்க இயக்குனரகம் அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து,டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினை ஜூன் 13 ஆம் தேதி வரை மேலும் 5 நாள் அமலாக்கத்துறை காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இந்நிலையில்,இன்றுடன் அமலாக்கத்துறை காவல் முடிந்ததால் டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினை 14 நாட்கள் நீதிமன்றக்காவலில் அடைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

unknown node
சற்று முன்...டெல்லி சுகாதாரத்துறை அமைச்சருக்கு 14 நாட்கள் சிறைத்தண்டனை – நீதிமன்றம் போட்ட உத்தரவு!