தீபா மற்றும் தீபக் தொடர்ந்த வேதா நிலைய வழக்கில் நாளை தீர்ப்பு...!

The verdict in the case of Deepa and Deepak, who banned the conversion of the Vedha Center of the late Chief Minister Jayalalithaa into a memorial house, will be announced tomorrow.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தடை விதித்து தீபா மற்றும் தீபக் தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் எனும் வீட்டில் தான் வசித்து வந்தார். இந்த இல்லத்தை நினைவிடமாக மாற்ற உள்ளதாக 2017 ஆம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்திருந்தார். அந்த இடத்தை தமிழக அரசு கையகப்படுத்தி, அரசுடைமை ஆக்குவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில் இதனை எதிர்த்து போயஸ் கார்டனில் குடியிருப்போர் மற்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோர் இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில், தற்போது இது தொடர்பான தீர்ப்பு நாளை வெளியாக உள்ளது.

தீபா மற்றும் தீபக் தொடர்ந்த வேதா நிலைய வழக்கில் நாளை தீர்ப்பு...!