தமிழகத்தில் இன்று முதல் வரும் 28-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அந்த வகையில் கடந்த ஜூன் 14-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்த ஊரடங்கு இன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், புதிய தளர்வுகளுடன், ஊரடங்கை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.