காட்டுமன்னார் கோவில் தொகுதி..!அதிமுக வேட்பாளர் என்.முருகுமாறன் முன்னிலை...!

Cuddalore district, Kattumannar temple constituency ..! AIADMK candidate N. Murukumaran leads ...!

கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார் கோவில் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிமுக வேட்பாளரான என்.முருகுமாறன் முன்னிலையில் உள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி  நடைபெற்றது.இதனையடுத்து,நடந்து முடிந்த தேர்தலின் வாக்குகள் எண்ணும் பணியானது தமிழகம் முழுவதும் இன்று காலை 8 மணியிலிருந்து ஆரம்பமாகியுள்ளது.முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இதனைத்தொடர்ந்து,கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் தபால் வாக்குகள் எண்ணிக்கையின் முதல் சுற்றில் அதிமுக வேட்பாளர் என்.முருகுமாறன் 3561 வாக்குகளும்,திமுக வேட்பாளர் 2731 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

அதாவது,அதிமுக வேட்பாளரான என்.முருகுமாறன்,தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் எம்.சிந்தனைச்செல்வனை விட 830 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் வகிக்கிறார்.

காட்டுமன்னார் கோவில் தொகுதி..!அதிமுக வேட்பாளர் என்.முருகுமாறன் முன்னிலை...!