கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார் கோவில் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிமுக வேட்பாளரான என்.முருகுமாறன் முன்னிலையில் உள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது.இதனையடுத்து,நடந்து முடிந்த தேர்தலின் வாக்குகள் எண்ணும் பணியானது தமிழகம் முழுவதும் இன்று காலை 8 மணியிலிருந்து ஆரம்பமாகியுள்ளது.முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதனைத்தொடர்ந்து,கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் தபால் வாக்குகள் எண்ணிக்கையின் முதல் சுற்றில் அதிமுக வேட்பாளர் என்.முருகுமாறன் 3561 வாக்குகளும்,திமுக வேட்பாளர் […]
கடலூர் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்து வகித்தவர் அன்புச்செழியன்.இவரது பதவிக் காலம் இன்றுடன் நிறைவடைய உள்ளது.இந்நிலையில் தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது அறிவிப்பில், கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச் செழியனின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைவதால், புதிய ஆட்சியராக சந்திரசேகர் ஷகாமுரி நியமனம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. தண்ணீரின்றி கருகிய பயிருக்கு பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்காததை கண்டித்து விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் குரங்கணி மலையில் உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ விபத்தில் உயிரிழந்த, கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த சுபாவின் குடும்பத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.