குடிநீர்தொட்டியில் மலம் கலந்தது தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். – அமைச்சர் ரகுபதி பேட்டி.
குடிநீர்தொட்டியில் மலம் கலந்த சம்பவம் நடந்த புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் ஊரில் இன்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சமத்துவ பொங்கல் விழா நிறைவடைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுகையில், சமத்துவ பொங்கல் விழா இனிதே நடைபெற்றது. பின்னர் அனைவரும் அய்யனார் கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட்டோம். என குறிப்பிட்டார்.
மேலும், குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் காவல்துறையினர் 70 முதல் 80 பேரிடம் விசாரித்துள்ளனர். அதன் பிறகே வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றபட்டது. சிபிசிஐடி காவல்துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். எனவும்,
மேலும், இரட்டை குவளை முறை வழக்கம் தற்போது எங்கும் கிடையாது. அப்படியே இருந்தாலும் அதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது எனவும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.