தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜுக்கு கொரோனா தொற்று உறுதி..!

Corona infection confirmed to IT Minister Thangaraj.

தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில்,அரசு அதிகாரிகள் மற்றும் திரைப்பிரபலங்கள் உட்பட ஏராளமான மக்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜுக்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனா அறிகுறிகள் இருந்ததையடுத்து பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து,கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அமைச்சர் தங்கராஜு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அமைச்சர் தங்கராஜுக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர்.மேலும்,அமைச்சரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும்,விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.