சோனியா காந்தி அவர்கள் கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘சோனியா காந்தி அவர்கள் கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன். தொற்றுநோய் இன்னும் நீங்காததால், பொது வாழ்வில் உள்ள அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
unknown node