ராமர் பாலம் தேசிய சின்னமாக அறிவிப்பது குறித்து பரிசீலனை.! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மத்திய அரசு விளக்கம்.!

ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் உள்ள ராமர் பாலம் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்படும் கோரிக்கை பரிசீலனையில் உள்ளது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியது.

ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் உள்ள ராமர் பாலம் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்படும் கோரிக்கை பரிசீலனையில் உள்ளது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியது.

ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் உள்ள பவளப்பாறை திட்டுகளான ராமர் பலத்தை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என பாஜகவை சேர்ந்த சுப்ரமணியசுவாமி வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் முடித்துவைக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையில் சுப்ரமணிய சுவாமி தரப்பு கூறுகையில், ராமர் பாலத்தை பரம்பரிய சின்னமாக அறிவிப்பதாக பாஜக அறிவிக்காமல் இழுத்தடித்து வருகிறது. தேர்தல் அறிக்கையில் இதுபற்றி கூறினாலும் இன்னும் அது நிறைவேறவில்லை என குறிப்பிட்டார்.

இது குறித்து மத்திய அரசு சார்பில், ராமர் பாலத்தை பரம்பரிய சின்னமாக அறிவிக்கப்படும் கோரிக்கையானது, பரிசீலனையில் உள்ளது. விரைவில் அந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கப்பட்டதை ஏற்று உச்சநீதிமன்றம் இந்த வழக்கை முடித்துவைத்தது.

ராமர் பாலம் தேசிய சின்னமாக அறிவிப்பது குறித்து பரிசீலனை.! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மத்திய அரசு விளக்கம்.!