இரண்டாவது முறையாக மேகாலயா முதல்வராக பதவியேற்றார் கான்ராட் சங்மா.!

மேகாலயா முதல்வராக இரண்டாவது முறையாக தேசிய மக்கள் கட்சியின் (என்பிபி) தலைவர் கான்ராட் சங்மா பதவியேற்றார்.

மேகாலயா முதல்வராக இரண்டாவது முறையாக தேசிய மக்கள் கட்சியின் (என்பிபி) தலைவர் கான்ராட் சங்மா பதவியேற்றார்.

கடந்த பிப்-27 இல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கான்ராட் சங்மாவின் என்பிபி கட்சி 26 இடங்களில் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வராக ஆட்சி அமைக்கிறது. மேகாலயாவில், என்பிபி தலைமையிலான கூட்டணி, 45 எம்எல்ஏக்களின் ஆதரவுடன்(பாஜக ஆதரவு உட்பட) ஆட்சி அமைக்கிறது. மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் கான்ராட் சங்மா 2-வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.

துணை முதல்வர்களாக பிரஸ்டோன் டைன்சாங், மற்றும் சியாவ்பலாங் தர் ஆகியோர் பதவியேற்றனர். ஷில்லாங்கில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் ஜே.பி.நட்டா ஆகியோர் பங்கேற்றனர்.