பிரதமரின் பிரித்தாளும் பிரச்சாரம் பலனளிக்கவில்லை.! காங். செய்தி தொடர்பாளர் விமர்சனம்.!

பிரதமரின் பிரித்தாளும் பிரச்சாரம் பலனளிக்கவில்லை என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கெரா விமர்சனம் செய்தார்.

Pavan khera

பிரதமரின் பிரித்தாளும் பிரச்சாரம் பலனளிக்கவில்லை என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கெரா விமர்சனம் செய்தார்.

கர்நாடகாவில் 224 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நடைபெற்ற பொதுத்தேர்தல் முடிவுகள் / முன்னணி நிலவரங்கள் வெளியாகி கொண்டு இருக்கின்றன. அதில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை தாண்டி காங்கிரஸ் முன்னணி வகித்து வருகிறது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த முன்னிலை நிலவரம் குறித்து பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கெரா  கூறுகையில் , காங்கிரஸ் கார்நாடகாவில் யாருடைய துணையும் இன்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். பிரதமரின் எதிர்ப்புவாத மற்றும் பிரித்தாளும் பிரச்சாரங்கள் கர்நாடக மக்களிடையே பலநிலைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.