பெட்ரோல் ,டீசல் விலை குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மானம்

Congress MP Manickam Tagore has given adjournment motion notice in Lok Sabha over the rise in fuel prices

பெட்ரோல் ,டீசல் விலை குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவரக்கோரி நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

ஜனவரி 29-ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்  தொடங்கியது.  ஜனவரி 29 -ஆம் தேதி முதல் பிப்ரவரி 15-ஆம் தேதி வரை முதல் அமர்வும், மார்ச் 8 -ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ஆம் தேதி வரை 2-வது அமர்வும் நடைபெறுகிறது.கடந்த 29-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது.

பின் பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.இதன் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனிடையே அண்மை காலமாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.இதனால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.இந்நிலையில் உயர்ந்து வரும் பெட்ரோல் ,டீசல் விலை குறித்து மக்களவையில் விவாதிக்க காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவரக்கோரி நோட்டீஸ் கொடுத்துள்ளார்.