பொய்யான குற்றசாட்டு.. காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.! அண்ணாமலை மீது காங்கிரஸ் எம்எல்ஏ பரபரப்பு புகார்.! 

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தற்போது 'என் மண் என் மக்கள்' எனும் பெயரில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். ராமேஸ்வரத்தில் துவங்கிய இந்த நடைபயணம்

BJP State President Annamalai

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தற்போது ‘என் மண் என் மக்கள்’ எனும் பெயரில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். ராமேஸ்வரத்தில் துவங்கிய இந்த நடைபயணம் விருதுநகர், நெல்லை , தூத்துக்குடி என கடந்து தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார் அண்ணாமலை.

இந்நிலையில் கன்னியாகுமரியில் நடைபயணம் மேற்கொண்டு இருக்கையில் அண்ணாமலை, குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ் பற்றி குற்றசாட்டுகளை முன்வைத்தார். அவர் பேசுகையில், குளச்சல் தொகுதி எம்எல்ஏ பிரின்ஸ் , நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தருடன் இணைந்து பதவிகளை விற்பதற்காக திமுக பிரமுகரே குற்றம் சாட்டியதாக குற்றசாட்டை முன்வைத்தார்.

இந்த குற்றசாட்டு குறித்து, குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ , கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் . அதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன் மீது உண்மைக்கு புறம்பான, ஆதாரமற்ற குற்றசாட்டுகளை முன்வைத்து தன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசி வருகிறார் எனவும் , இது குறித்து காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ் குறிப்பிட்டுள்ளார்.