காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கு கொரோனா

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனா வைரஸால் 60,439 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நேற்று ஒரே நாளில் 835 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுவரை இந்தியாவில் 7,365,509 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 112,146 பேர் இவர்களில் உயிரிழந்துள்ளனர். 6,448,658 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது மருத்துவமனையில் 804,705 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில்காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்குலாம்நபி ஆசாத்துக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.இது தொடர்பாககுலாம்நபி ஆசாத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,‘எனக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.எனவே நான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டேன். என்னுடன் கடந்த சில நாட்களாகத் தொடர்பில்  இருந்தவர்கள் , தயவுசெய்து தனிமைப்படுத்திக் கொண்டு கொரோனா  பரிசோதனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று  தெரிவித்துள்ளார்.

unknown node