புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி வாழ்த்து.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பில் வந்த ஒன்றரை ஆண்டுகள் ஆகியும், அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாத நிலையில், இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், 10 அமைச்சர்களின் இலகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் வசம் இருந்த சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை , நான் முதல்வன் திட்டம் , வறுமை ஒழிப்பு திட்டம் ஆகிய பொறுப்புகள் கூடுதலாக புதிய அமைச்சர் உதயநிதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அவர்கள் தலைமையிலான அமைச்சரவையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தம்பி உதயநிதிஅவர்களுக்கு நல்வாழ்த்துகள்.’ என பதிவிட்டுள்ளார்.
unknown node