வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம்.! சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்.!

வேளாண் மண்டலமான காவேரி டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்

வேளாண் மண்டலமான காவேரி டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

தமிழகத்தின் வேளாண் மண்டலமான காவேரி டெல்டா பகுதியில் புதிய நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு அண்மையில் டெண்டர் வெளியிட்டது. வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு எதிர்ப்புகள் உருவாகியுள்ளன.

கவன ஈர்ப்பு தீர்மானம் :

unknown node

இந்த திட்டத்தை நிறுத்த கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வலியுறுத்தி உள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கவனஈர்ப்பு தீர்மானத்தை திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக , விசிக , பாமக என பல்வேறு கட்சிகள் கொண்டு வந்துள்ளன.

திமுக எம்எல்ஏ :

unknown node

தற்போது அந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய திமுக எம்.எல்.ஏ டிஆர்பி ராஜா பேசுகையில், மத்தியஅரசு புவி வெப்பமாவதை தடுத்து, பசுமையான  நாட்டை உருவாக்க வேண்டும் என கூறுகிறார்கள். ஆனால், அதற்கு மாறாக, இது போன்ற திட்டங்களை கொண்டு வருகிறது என்று குறிப்பிட்டார்.

1000 கோடி ரூபாய் :

தமிழக அரசு சார்பில் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவேரி டெல்டா பகுதியானது பாதுகாக்கபட்ட வேளாண் மண்டலமாக மற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதில் வேளாண் சார்ந்த திட்டங்களை தவிர வேறு திட்டங்கள் இங்கு கொண்டுவரப்பட்டது எனவும் திமுக எம்எல்ஏ குறிப்பிட்டார்.

அதிமுக எம்எல்ஏ :

unknown node

அடுத்ததாக , அதிமுக எம்எல்ஏ காமராஜ் பேசுகையில், நிலக்கரி சுரங்கத்திற்காக டெண்டர் கோரோபட்டுள்ளது. இதே போல அதிமுக ஆட்சி காலத்தில் மீத்தேன் திட்டம் எடுக்க மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்ட போது, அப்போது ஆட்சியில் இருந்த ஜெயலலிதா அவர்கள் நிரந்தரமாக அந்த திட்டத்தை தடுத்தார் என்றும்,

38 எம்பிக்கள் :

காவேரி டெல்டா பகுதியை பாதுகாக்கபட்ட பகுதியாக அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார் என கூறினார். மேலும், அங்கு வேளாண் மண்டலத்தில் புதிய தொழிற்சாலை அமைக்க அனுமதி அளிக்கப்படவில்லை என கூறினார். திமுக 38 எம்பிகளை கொண்டுள்ளது அவர்களை கொண்டு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுங்கள் என்றும், முதல்வர் கடிதம் எழுதியதற்கு பதிலாக தொலைபேசியில் பிரதமரை தொடர்பு கொண்டிருக்கலாம் என அதிமுக எம்எல்ஏ கூறினார்.

காங்கிரஸ் எம்எல்ஏ :

unknown node

அடுத்ததாக, காங்கிரஸ் எம்எல்ஏ செல்வ பெருந்தகை பேசுகையில், பாஜக அரசு கொண்டு வரும் திட்டங்கள் தமிழகத்திற்கு எதிராகவே உள்ளது என விமரிசித்தார். அடுத்ததாக, காவேரி டெல்டா வேளாண் மண்டத்தில் இருந்து 33 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு நெல் விளைவிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டார். மதியா அரசானது, நிலக்கரி வாயிலாக அல்லாமல், சூரிய ஒளியிலோ, கடல் அலையிலோ மின்சாரம் எடுக்க முயற்சி செய்யலாம் என கூறி தனது உரையை முடித்துக்கொண்டார் காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை.

பாஜக எம்எல்ஏ :

unknown node

இந்த திட்டத்தை கொண்டு வந்த பாஜகவின் எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசுகையில், ஒரு மனிதனுக்கு சோறு வேண்டுமா? மின்சாரம் வேண்டுமா என்றால், சோறு தான் மனிதனுக்கு முக்கியம். வேளாண் மண்டலமாக அறிவித்துள்ள ஒரு பகுதியில் மத்திய அரசு திட்டம் கொண்டு வருகிறது என்றால், அது உள்ளூர் வருவாய்த்துறைக்கு தெரிவித்து தான் வரும். திட்டம் ஆரம்பிக்கப்படும் போதே இதனை அவர்கள் தெரிவித்து இருக்கலாம் என கூறினார். அடுத்தாக, இந்த நிலக்கரி சுரங்கம் அமைப்பது தொடர்பாக, நிலக்கரித்துறை அமைச்சருக்கு பாஜக சார்பில் கடிதம் எழுதியுள்ளோம் இதனை நிறுத்த நாங்கள் வலியுறுத்துவோம். என வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.