நாளை முதல் தேர்தல் பரப்புரை – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

Chief Minister of Tamil Nadu Edappadi K. Palaniswami to begin 2021 tamilnadui election campaign Salem tomorrow

வரும் சட்டமன்ற தேர்தலுக்கான தனது பிரச்சாரத்தை நாளை சேலத்திலிருந்து முதலமைச்சர் பழனிசாமி தொடங்குகிறார்.

2021 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் வெகு விரைவில் நெருங்கிவரும் நிலையில், தற்போது அரசியல் கட்சிகள் தங்களுக்கான தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டன.அதிமுக – திமுக இடையே எப்போதும் வழக்கம்போல நேரடி போட்டி நிலவி வருகிறது.

இதற்கு இடையில் ரஜினியும் ஜனவரி மாதம் கட்சி துவங்குவதாக அறிவித்துள்ளார்.விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த சட்டமன்ற தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஏற்கனவே தனது பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார்.

இந்நிலையில் சேலத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில், நாளை முதல் சேலம் மாவட்டம் பெரிய சோரகை பெருமாள் கோயில் அருகே 2021 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.