மகளிருக்கு இலவச சேவையை துவங்கி வைத்து பேருந்தில் ஒன்றாக பயணம் செய்த சித்தராமையா – டி.கே .சிவகுமார்.!

மகளிருக்கு இலவச பேருந்து சேவையை துவங்கி வைத்த பின்னர் அரசு பேருந்தில்  முதல்வர் சித்தராமையா - துணை முதல்வர் டி.கே .சிவகுமார் ஒன்றாக பயணம் செய்தனர்.

karnatkaa cm Siddaramaiah

மகளிருக்கு இலவச பேருந்து சேவையை துவங்கி வைத்த பின்னர் அரசு பேருந்தில்  முதல்வர் சித்தராமையா – துணை முதல்வர் டி.கே .சிவகுமார் ஒன்றாக பயணம் செய்தனர்.

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் பொறுப்பில் இருக்கின்றனர்.காங்கிரஸ் ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் மிக முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை அம்மாநில அரசு நிறைவேற்றி வருகிறது.

அதன்படி தமிழகத்தில் திமுக அரசு செயல்படுத்தி வரும் நகர பேருந்துகளில் மகளிருக்கு இலவசம் என்பது போல  கர்நாடகாவிலும் மகளிருக்கு இலவச பேருந்து சேவையை முதல்வர் சித்தராமையா தொடங்கி வைத்தார். பின்னர் முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் ஒன்றாக அரசு பேருந்தில் பயணித்தனர்.