சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை திடீரென ஆய்வு நடத்திய தமிழக முதல்வர்....

சென்னை சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தற்போது  ஆய்வு நடத்தி வருகிறார். அங்கு தயாரிக்கப்படும் உணவின் தரம் குறித்தும்

சென்னை சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தற்போது  ஆய்வு நடத்தி வருகிறார். அங்கு தயாரிக்கப்படும் உணவின் தரம் குறித்தும் பின்பற்றப்படும் விதிகள் குறித்தும்  தற்போது ஆய்வு நடத்தினார். அதனைத்தொடர்ந்து சென்னை சாந்தோமை ஆய்வு செய்த பின், கலங்கரை விளக்கத்தில் உள்ள அம்மா உணவகத்திலும் முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். முதல்வர் பழனிசாமியுடன் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் உணவின் தரம் குறித்தும் பின்பற்றப்படும் விதிகள் பற்றி உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

unknown node

அப்போது,  அம்மா உணவகத்தில் உணவு சமைக்கப்பொருள்கள்  உரிய இருப்பு உள்ளதா என்பது குறித்தும், உணவின் தரம், சமையல் அறை சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு நடத்தினார். இது குறித்து  சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,  அம்மா உணவகத்தில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்தியதாகவும்,  அம்மா உணவகத்தில் உணவு தரமாகவும், சுவையாகவும் இருந்ததாக முதல்வர் பாராட்டு தெரிவித்தார்.

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை திடீரென ஆய்வு நடத்திய தமிழக முதல்வர்....