கோவையில் செம்மொழிப்பூங்கா பணிகள் விரைவில்; அமைச்சர் செந்தில் பாலாஜி.!

கோவையில் சாலை திட்டப் பணிகளை தொடங்கி வைத்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, விரைவில் செம்மொழிப் பூங்கா பணிகள் தொடங்கப்படும் என கூறியுள்ளார்.

கோவையில் சாலை திட்டப் பணிகளை தொடங்கி வைத்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, விரைவில் செம்மொழிப் பூங்கா பணிகள் தொடங்கப்படும் என கூறியுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவையில் பல்வேறு திட்டப்பணிகளுக்காக தொடங்கிவைத்து பேசியபோது, தார்சாலை போடுவதற்காக மக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் முதல்வர் கவனத்திற்கு பெறப்பட்டு, 32 கோடி மதிப்பிலான பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சாலை பணிகளுக்காக முதல்வரின் ஒப்புதலுடன் டெண்டர் முடிந்து இன்று பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும் கடந்த கால புதுப்பிக்கப்படாத சாலைகளுக்காக மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு, முதல்வரிடம் ஒப்புதல் வழங்கப்பட்டு அதற்கான மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டன. தற்போது இந்த பணிகளுக்காக மொத்தமாக 200 கோடி மதிப்பிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, படிப்படியாக இந்த திட்டங்கள் செயல்படும் வகையில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

கடந்த 2 ஆண்டுகளில் 121 கிமீ தொலைவிலான சாலைகளுக்கு 223 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான 70% சதவீத பணிகள் நிறைவடைந்து, மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன எனவும், மெட்ரோ உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 9000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதல்வரின் ஒப்புதல் பெற்றவுடன் தொடங்கப்படும்.

வேலைவாய்ப்பிற்காக கோவை டெக் சிட்டி உள்ளிட்ட திட்டங்கள் தொடங்கப்பட உள்ளதாகவும், மேலும் கோவையில் செம்மொழிப்பூங்கா தொடங்கும் முதற்கட்ட பணிகள் விரைவில் தொடங்க உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.