#Breaking: ஆளுநருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு...!

Chief Minister Stalin is currently meeting Governor Banwarilal Purohit

தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக,ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது சந்தித்துள்ளார்.

கடந்த மாதம் 13-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின்,ஆளுநரை சந்தித்த போது கொரோனா நிவாரணமாக ஒரு கோடி ரூபாய் நிதி கொடுத்தார்.பின்னர் கொரோனாவிற்கு தமிழக அரசு  எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிலையில்,தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தற்போது சந்தித்துள்ளார்.

மேலும்,தற்போது தமிழகத்தில் உள்ள ஊரடங்கு மற்றும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விளக்கி வருகிறார்.

முதல்வருடன் தலைமைச் செயலாளர் இறையன்பு, முதல்வரின் தனி செயலாளர் உதயச்சந்திரன்,சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

#Breaking: ஆளுநருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு...!