பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் வழங்கினார். பஞ்சாப் மாநில முதலமைச்சர் கேப்டன் அமரிந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். சண்டிகரில், பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் அமரிந்தர் சிங் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் 5 மணிக்கு நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக அமரிந்தர் சிங் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஆளுநரிடம் பதவி விலகல் கடிதத்தை அளித்த பிறகு […]
திமுக அரசின் வாக்குறுதிகள் எல்லாம் ஆட்சிக்கட்டிலில் அமருவதற்காக அள்ளிவீசப்பட்டவையோ என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது.அக்கூட்டத்தொடரில்,ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சில தமிழக வளர்ச்சி திட்டங்கள்,நீட் தேர்வு ரத்து போன்றவை குறித்து உரையாற்றினார். இந்நிலையில்,திமுக அரசின் செயல்பாடுகள் மற்றும் ஆளுநர் உரை குறித்து,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: “ஆட்சியாளர்களின் கொள்கைத் திட்டங்களை விளக்குவதே ஆளுநர் உரை என்றும்,அக்கொள்கைத் திட்டங்களுக்கு ஏற்ப […]
தமிழகத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க,நோபல் பரிசுபெற்ற நிபுணர், ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் உள்ளிட்ட 5 பேர் கொண்ட நிபுணர்குழு அமைக்கப்படும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை. தமிழக 16 வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.முதலாவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் தமிழில் வணக்கம் சொல்லி உரையாற்றினார். அந்த உரையில்,”தமிழகத்தில் விரைவான பொருளாதார வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கான பாதை அமைத்து தமிழக முதல்வருக்கு ஆலோசன வழங்க பொருளாதார ஆலோசனைக் குழு ஒன்றை […]
தமிழகத்தில் 15 நாட்களுக்குள் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். 16-ஆவது புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று கலைவாணர் அரங்கில் நடைபெற்றுவருகிறது.முதலாவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித்,”காலை வணக்கம், தமிழ் இனிமையான மொழி, எளிமையான வாழ்க்கை வாழுங்கள்.” எனக் கூறி தனது உரையை தமிழில் தொடங்கினார். அதன்பின்பு பேசிய அவர்,”புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த நபர்களுக்கு 15 நாட்களுக்குள் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்”, […]
தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக,ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது சந்தித்துள்ளார். கடந்த மாதம் 13-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின்,ஆளுநரை சந்தித்த போது கொரோனா நிவாரணமாக ஒரு கோடி ரூபாய் நிதி கொடுத்தார்.பின்னர் கொரோனாவிற்கு தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. இந்நிலையில்,தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தற்போது சந்தித்துள்ளார். மேலும்,தற்போது தமிழகத்தில் உள்ள ஊரடங்கு மற்றும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து […]