#Breaking:தமிழகத்தில் 22 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு – முதல்வரின் அதிரடி அறிவிப்பு..!

Chief Minister Stalin has announced that 2 factories will be set up in Tamil Nadu to provide employment to 22 thousand people

தமிழகத்தில் 22 ஆயிரம் பேருக்கு வேலை தரும் வகையில்,2 தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக 16-வது சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் கூட்டமானது, ஜூன் 21-ஆம் தேதி தொடங்கியது.இந்த கூட்டத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் உரையாற்றி தொடங்கி வைத்தார்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து, இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து வருகிறார்.

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,”தமிழகத்தில் 22 ஆயிரம் பேருக்கு வேலை தரும் வகையில், திண்டிவனம்,செய்யாறு பகுதிகளில் 2 பெரும் தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.

வடமாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை பெருக்கிட 2 தொழிற்சாலைகள் நிறுவப்படும்”,என்று தெரிவித்தார்.