மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து...!

இன்று மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மருத்துவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இன்று மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மருத்துவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இன்று மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மருத்துவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ள நிலையில், இது தொடர்பாக முதல்வர் தனது ட்வீட்டர் பக்கத்தில், இது மக்களின் அரசு, மருத்துவர்களுக்கான அரசாகவும் இருக்கும். நீங்கள் மக்களைக் காக்கும் மகத்தான பணியைத் தொடருங்கள். இந்த அரசு உங்களைப் பாதுகாக்கும் முன்களவீரராகச் செயலாற்றும், துணை நிற்கும் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மக்கள் நலம் காக்கும் மகத்தான பணியில் செயல்படும் மருத்துவர்கள் அனைவருக்கும் ‘இந்திய மருத்துவர்கள் நாளில்’ வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனா பேரிடர் காலத்தில் வெள்ளை உடுப்பு அணிந்த இராணுவம்போல் அல்லும் பகலும் அரும்பணியாற்றுகின்றனர் மருத்துவர்கள்.

நாம் மேற்கொண்ட போர்க்கால நடவடிக்கைகளில், தளகர்த்தர்களாக – சிப்பாய்களாக – முன்களவீரர்களாகப் பணியாற்றி, நோய்த்தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவந்த மருத்துவர்களுக்கு இந்த நன்னாளில் வாழ்த்தும், நன்றியும்!

தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு வலிமைபெற இந்த அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு உங்களின் ஒத்துழைப்பை எதிர்நோக்குகிறேன்.

இது மக்களின் அரசு. மக்களின் உயிர்காக்கும் மருத்துவர்களுக்கான அரசாகவும் என்றும் இருக்கும்.

நீங்கள் மக்களைக் காக்கும் மகத்தான பணியைத் தொடருங்கள். இந்த அரசு உங்களைப் பாதுகாக்கும் முன்களவீரராகச் செயலாற்றும்; துணை நிற்கும்.

என தெரிவித்துள்ளார்.

unknown node