#BREAKING : நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்...!

Chief Minister MK Stalin provided welfare assistance.

நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 98-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளில் பெரிய அளவில் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

கலைஞரின் கோபாலபுர இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதன்பின் மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்றுசக்கர சைக்கிள், ஏழை எளிய மக்களுக்கு கொரோனா நிவாரண உதவியாக மளிகை பொருட்கள், ஆதரவற்ற பெண்களுக்கு தையல் இயந்திரம், மாணவ மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன் ஆகியவற்றை வழங்கியுள்ளார்.

#BREAKING : நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்...!