மதுரையிலுள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை ...!

Chief Minister MK Stalin has paid homage to the idol of Lord Muthuramalinga on the occasion of his birthday by wearing the garland of MK Stalin.

முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரையிலுள்ள தேவர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.

இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள வெண்கல தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.

இந்நிகழ்வில் அமைச்சர்கள் மூர்த்தி, பெரியசாமி மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். பின்னர், சாலை மார்க்கமாக பசும்பொன் சென்று அங்குள்ள தேவர் நினைவிடத்திலும் முதல்வர் மரியாதை செய்யவுள்ளார். இதன் பின்பதாக மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது பாண்டியர் சிலைக்கு முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மதுரையிலுள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை ...!