கிண்டி கிங் சிறப்பு உயர் பன்னோக்கு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சென்னை கிண்டி கிங் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டியுள்ளார். இந்த நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை கிண்டி கிங் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டியுள்ளார். இந்த நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மருத்துவமனையில் சிறப்பு அம்சங்கள்

இந்த மருத்துவமனையானது ரூ.250 கோடியில், 4.89 ஏக்கரில், ஆறு தளங்களைக் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை கட்டடமாக கட்டப்பட உள்ளது. இது கிங் நோய் தடுப்பு ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் அமைக்கப்படுகிறது. இந்த மருத்துவமனையானது ஆயிரம் படுக்கை வசதியுடன் கூடிய உயர் சிறப்பு சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவமனையாக அமைய உள்ளது.