சட்டப்பேரவையில் முதல்வர் பேச அனுமதித்திருக்க கூடாது.! அதிமுக எம்எல்ஏ பேச்சு.!

சட்டபேரவையில் ஆளுநர்  பேசி அமர்ந்த பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச அனுமதி அளித்திருக்க கூடாது. - அதிமுக எம்எல்ஏ முனுசாமி கருத்து.

சட்டபேரவையில் ஆளுநர்  பேசி அமர்ந்த பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச அனுமதி அளித்திருக்க கூடாது. – அதிமுக எம்எல்ஏ முனுசாமி கருத்து.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வில், தமிழக அரசு கொடுத்த உரையினை ஆளுநர் வாசிக்கையில் பல்வேறு விஷயங்களை குறிப்பிடாமல் விட்டுவிட்டார். இதற்கு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் தங்கள் எதிர்ப்பபை தெரிவித்தனர்.

இன்று இது குறித்து அதிமுக எம்எல்ஏ முனுசாமி பேசுகையில், சட்டபேரவையில் ஆளுநர்  பேசி அமர்ந்த பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச அனுமதி அளித்திருக்க கூடாது. எந்தவித முன்அறிவிப்பும் கொடுக்காமல் இந்த நிகழ்வு நடந்துள்ளளது. என தெரிவித்தார்.

அதற்கு பதில் அளிக்கும் விதமாக, சட்டப்பேரவை தலைவர், கூறுகையில், ஆளுநர் பேசிய பிறகு பேசாமல் அமர்ந்து இருந்திருந்தால் அது மாநிலத்திற்கே தலைகுனிவு என குறிப்பிட்டார்.