தனது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை.! 

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் மற்றும் அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் மற்றும் அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். முதல்வர் பிறந்தநாளை இன்று திமுக தொண்டர்கள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.

அண்ணா – கலைஞர் நினைவிடம் :இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு திமுகவை துவங்கியவரும் முன்னாள் முதல்வருமான அறிஞர் அண்ணா நினைவிடத்தில், அதே போல, முன்னாள் முதல்வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் தந்தையுமான கலைஞர் கருணாநிதி ஆகியோர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மஞ்சப்பை :அதன் பிறகு அண்ணா அறிவாலயம் புறப்பட்டுள்ளார். அங்கு தொண்டர்களை சந்திக்க உள்ளார் . அங்கு தொண்டர்களுக்கு மஞ்சப்பையுடன் மரக்கன்றுகளை வழங்க உள்ளார்.

அமைச்சர்கள் :உடன் திமுக அமைச்சர்கள் துறைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், திமுக எம்பி டி.ஆர்.பாலு , அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா என பலர் இந்த முதல்வர் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டுள்ளனர்.