பல்லை உடைத்து எஸ்பி சித்தரவதை.. அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்.! முதல்வர் விளக்கம்.!

நெல்லை ஏஎஸ்பி விசாரணையில் பலரது பல்லை பிடுங்கிய விவகாரம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.

நெல்லை ஏஎஸ்பி விசாரணையில் பலரது பல்லை பிடுங்கிய விவகாரம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.

நெல்லை ஏஎஸ்பி பலவீர் சிங், குற்றச்சம்பவங்கள் தொடர்பாக பலரை விசாரணைக்கு அழைத்து சென்று அவர்கள் பல்லை பிடுங்கி சித்திரவதை செய்ததாக அவர் மீது பலர் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து அவர் ஆட்சியர் விசாரணைக்கு பின்னர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

கவன ஈர்ப்பு தீர்மானம் :

இந்த விவகாரம் தொடர்பாக இன்று தமிழக சட்டப்பேரவையில் அம்பாசமுத்திரம் அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா உள்ளிட்டோர் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தனர். ஏஎஸ்பி பலவீர் சிங் மீது நடவடிக்கை எடுத்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றிலனாலும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தனர்.

முதல்வர் விளக்கம் :

இது தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அதில், சம்பத்தப்பட்ட ஏஎஸ்பி பலவீர் சிங் குற்றசெயலில் ஈடுபட்டதாக சிலரை விசாரணைக்கு அழைத்து பல்லை பிடுங்கியது ஏற்கக்கூடிய செயல் அல்ல. அவர் மீது ஆட்சியர் தலைமையில் விசாரணை தொடங்கப்பட்டு அவர் காத்திருப்போர் பட்டியலிலுக்கு மாற்றப்பட்டார். புகார் அளித்த உடன் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்ட்டார்.