12 மணிநேர வேலை மசோதா திரும்ப பெறப்பட்டது.! உழைப்பாளர் தின நிகழ்வில் முதல்வர் அறிவிப்பு.!

12 மணிநேர வேலை மசோதா திரும்ப பெறப்பட்டது என உழைப்பாளர் தின நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

MK Stalin IAS

12 மணிநேர வேலை மசோதா திரும்ப பெறப்பட்டது என உழைப்பாளர் தின நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, சென்னை சிந்தாதிரிபேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ள உழைப்பாளர் நினைவு சின்னத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சிவப்பு நிற உடையணிந்து வந்து தனது மரியாதையை செலுத்தினார்.

மரியாதை செலுத்திய பின்னர் நடந்த நிகழ்ச்சியில் தொழிலாளர்கள் முன்னிலையில் முதல்வர் உரையாற்றினார். அப்போது 12 மணிநேர மசோதா பற்றி கூறினார். அண்மையில் சட்டமன்றத்தில் திமுக கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்த தொழிற்சாலை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது. அதன் மூலம் தொழிலாளர்கள் 12 மணிநேரம் வேலை செய்யலாம் என கூறப்பட்டது. இந்த சட்டத்திற்கு பிரதான கட்சியினர், தொழிற்சங்கத்தினர் தனது எதிர்ப்பை தெரிவித்து வந்ததை தொடர்ந்து சட்ட மசோதா நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த சட்ட மசோதா பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், சமீபத்தில் பெரும் முதலீடுகளை ஈர்க்க, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்க 12 மணிநேர வேலை சட்ட மசோதா கொண்டுவரப்பட்டது. தற்போது இந்த மசோதா திரும்ப பெறப்பட்டது என்றும்,  மசோதா திரும்பப் பெறப்படுவது குறித்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் விரைவில் தெரிவிக்கப்படும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், 12 மணி நேர வேலை மசோதாவை திரும்ப பெறுவதாக கூறிய பிறகும் சிலர் அவதூறு பரப்புகின்றனர் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே தின நிகழ்வில் குறிப்பிட்டார்.

திமுக அரசு கொண்டு வந்த மசோதாவாக இருந்தாலும் திமுக தொழிற்சங்கமே அதை எதிர்த்ததை நான் வெகுவாக பாராட்டுகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பை பற்றியும் விழாவில் பேசினார்.