காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள கார்கேவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!

காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மல்லிகார்ஜுனே கார்கேவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து ட்விட்.

காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மல்லிகார்ஜுனே கார்கேவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து ட்விட்.

காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தல் கடந்த 17-ஆம் தேதி  நடைபெற்று முடிந்த நிலையில்,  இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் போட்டியிட்டனர்.

இதனையடுத்து இன்று 9500 வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், மல்லிகார்ஜுன கார்கே 7,897 வாக்குகள் பெரும்பான்மையோடு வெற்றி பெற்றார்.  சசிதரூர் 1,072 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இதனையடுத்து மல்லிகார்ஜுன கார்கே  தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மல்லிகார்ஜுனே கார்கேவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில், ‘காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மல்லிகார்ஜுனே கார்கேவுக்கு வாழ்த்துக்கள். இந்தியாவின் மதச்சார்பற்ற மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நெறிமுறைகளைப் பாதுகாக்க நாம் அனைவரும் போராடும் ஒரு முக்கியமான கட்டத்தில் அவர் பழைய கட்சியின் பொறுப்பை ஏற்றுள்ளார். அவரது புதிய பொறுப்பில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.’ என தெரிவித்துள்ளார்.

unknown node