விமான நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்ட சட்டீஸ்கர் முதல்வர்..!

The Chhattisgarh Chief Minister, who was detained by the authorities while trying to go to Lakhimpur, has been involved in Tarna.

லக்கிம்பூருக்குச் செல்ல முயன்ற போது அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட சத்தீஸ்கர் முதல்வர் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது கார் மோதியதில் 4 விவசாயிகள் உயிரிழந்தனர். அப்போது, ஏற்பட்ட வன்முறையில் பத்திரிகையாளர் உட்பட மேலும் 5 பேர் உயிரிழந்தனர். இதனால், லக்கிம்பூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று லக்னோ விமான நிலையத்திற்கு வந்த சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் லக்கிம்பூருக்குச் செல்ல முயன்ற போது அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனையடுத்து, விமான நிலையத்தில் சத்தீஸ்கர் முதல்வர் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.

இதற்கிடையே லக்கிம்பூருக்குச் செல்ல முயன்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வன்முறை நடந்த இடத்திற்கு செல்ல உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டர்.

விமான நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்ட சட்டீஸ்கர் முதல்வர்..!