பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தெலுங்கானா முதலவர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா தலைமையில் டெல்லியில் போராட்டம் நடைபெறுகிறது.
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகளும், பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சியின் முக்கிய தலைவருமான கவிதா இன்று டெல்லியில் போராட்டம் தொடங்கி உள்ளார். பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
பல்வேறு கட்சியினர் :
unknown nodeஇந்த போராட்டத்திற்கு நாடு முழுவதும் இருந்து பல்வேறு கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதனை அடுத்து, 33 சதவீத இடஒதுக்கீடு போராட்டத்தில் இடதுசாரிகளான CPI மற்றும் CPM , ஆம் ஆத்மி, சிவசேனாஎன பல கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
33% சட்ட மசோதா :
unknown nodeஇந்த போராட்டத்தை சிபிஎம் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெய்ச்சூரி தொடங்கி வைத்தார். இந்த போராட்டத்தில், கடந்த 2008ஆம் ஆண்டு மாநிலங்களவையில் 33 சதவீத இடஒதுக்கீடு சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது.அடுத்து 2010ஆம் ஆண்டு மக்களவையில் இந்த சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது .
சட்டமசோதா காலாவதி :
unknown nodeஆனால், நிறைவேற்றப்படாத காரணத்தால், அந்த சட்ட மசோதாக்கள் காலாவதியாகி விட்டன. ஆதலால், நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேறற வேண்டும் என பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சியின் சார்பில் கவிதா நடத்தும் போராட்டத்தில் வலியுறுத்தப்படுகிறது.
கவிதாவுக்கு சம்மன் :
unknown nodeடெல்லி மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறையினர் கவிதாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் நாளை டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக உள்ளார் .