அதிகரிக்கும் கிரானைட் கடத்தல்கள்.! தமிழக அரசுக்கு கடிதம் எழுதிய ஆந்திர முன்னாள் முதல்வர்.!

ஆந்திர மற்றும் தமிழ்நாடு எல்லையில் கிரானைட் கடத்தல் கும்பல் அதிகரித்து உள்ளதாக தமிழக அரசுக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.

ஆந்திர மற்றும் தமிழ்நாடு எல்லையில் கிரானைட் கடத்தல் கும்பல் அதிகரித்து உள்ளதாக தமிழக அரசுக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.

ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டின் எல்லை பகுதியில் அமைந்துள்ள குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் கிரானைட் குவாரிகளில் இருந்து சட்ட விரோதமாக தமிழகத்திற்கு கிரானைட் கற்கள் கடத்தப்படுவதாக ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.00

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்புவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் குவாரிகளில் இருந்து விலையுயர்ந்த கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன.

வெட்டி எடுக்கப்பட்ட அந்த கிரானைட் கற்கள் சட்ட விரோதமாக தமிழகத்தின் கிருஷ்ணகிரி மற்றும் வேலூர் மாவட்டங்கள் வழியாக கடத்தப்படுகிறது என்றும், இதன் காரணமாக ஆந்திர மற்றும் தமிழ்நாடு எல்லையில் கிரானைட் கடத்தல் கும்பல் அதிகரித்து உள்ளதாகவும் இதனை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.