ஆந்திர சட்டமன்றத்தில் எம்எல்ஏ தாக்கப்பட்டதை குறிப்பிட்டு இன்றைய தினம் கருப்பு தினம் என எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாய்டு ககண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்று ஆந்திர சட்டப்பேரவை காலை தொடங்கியது. அப்போது எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இந்த அமளியில் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி தலித் எம்எல்ஏ சுவாமி தாக்கப்பட்டதாக தெரிகிறது.
கருப்பு தினம் :
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான சந்திரபாபு நாய்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்றைய நாள் ஆந்திர சட்டப்பேரவையில் கருப்பு தினம் என குறிப்பிட்டுளளார். 75ஆண்டுகால ஆந்திர சட்டப்பேரவையில் இம்மாதிரியான சம்பவங்கள் நடைபெற்றது இல்லை என தெரிவித்தார்.
கண்டனம் :
ஆந்திர சட்டமன்றத்தின் பெயரை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கெடுத்துவிட்டார். எம்எல்ஏ மீதான தாக்குதல் மூலம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை மக்கள் தெளிவாக புரிந்து கொண்டுள்ளனர் எனவும் தனது கண்டனத்தை எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாய்டு குறிப்பிட்டார்.