#Breaking:கிராம பஞ்சாயத்து அலுவலக வளாகங்களில் சிசிடிவி கேமரா – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு...!

CCTV camera in Grama Panchayat office premises - High Court orders Tamil Nadu government

தமிழகம் முழுவதும் உள்ள கிராம பஞ்சாயத்துகளில்  பட்டியலினத்தவர் தலைவராக உள்ள அலுவலக வளாகங்களில் சாதிய ரீதியிலான குற்றங்களை கட்டுப்படுத்த,

சிசிடிவி கேமரா பொருத்த உத்தரவிட கோரிய மனுவிற்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் பட்டியலினத்தவர் தலைவராக உள்ள கிராம பஞ்சாயத்து அலுவலகங்களில்,சிசிடிவி பொருத்தக்கோரி வழக்கறிஞர் ராஜகுரு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதாவது,தமிழ்நாட்டில் உள்ள பஞ்சாயத்துகளில் 1997 ஆம் ஆண்டு முதல் 6  பட்டியலின தலைவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.மேலும், பஞ்சாயத்துகளில் பட்டியலின தலைவர்கள் சாதி ரீதியான பாகுபாடுடன் நடத்தப்படுகின்றனர்.

எனவே,தமிழகத்தில் பட்டியலினத்தவர் தலைவராக உள்ள கிராம பஞ்சாயத்து அலுவலகங்களில்,தமிழக அரசு சார்பில் சிசிடிவி பொருத்த வேண்டும்”,என்று கூறி வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில்,இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்,”தமிழகம் முழுவதும் உள்ள கிராம பஞ்சாயத்து அலுவலக வளாகங்களில் சாதிய ரீதியிலான குற்றங்களை கட்டுப்படுத்த,சிசிடிவி கேமரா பொருத்த கோருவது பற்றி 4 வாரத்திற்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்”, என்று உத்தரவிட்டுள்ளனர்.