காவிரி-வைகை குண்டாறு இணைப்பு திட்டம்; சட்டப்பேரவையில் துரை முருகன் பதில்.!

காவிரி-வைகை குண்டாறு இணைப்பு தொடர்பாக, சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

காவிரி-வைகை குண்டாறு இணைப்பு தொடர்பாக, சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை தொடங்கி நடைபெறுவரும் வேளையில், காவிரி- வைகை குண்டாறு இணைப்பு திட்டம் தொடர்பாக, அதிமுக சார்பில் விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் இந்த கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.

அதிமுக ஆட்சியில் ரூ.6900 கோடியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இந்த காவிரி- வைகை குண்டாறு இணைப்பு திட்டம், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கியதாக விஜயபாஸ்கர் கூறினார். தற்போது இந்த வரலாற்று சிறப்பு மிக்க திட்டத்தை அரசு மீண்டும் கவனத்தில் எடுத்து விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் பல்வேறு முதல்வர்களும் இந்த திட்டத்தினை நிறைவேற்ற எண்ணி, கடந்த ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டதாக விஜயபாஸ்கர் கூறினார். ஏழு மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகளும் அரசு தீர்த்து வைக்கவேண்டும் எனவும் அதிமுக வலியுறுத்தியுள்ளது.

இதனையடுத்து பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மு.க.ஸ்டாலின் ஆட்சியில் நிச்சயம் இந்த காவிரி- வைகை குண்டாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும் என உறுதியளித்துள்ளார்.