சட்ட மசோதாக்களுக்கு, ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கையெழுத்திடாததால், அவர் மீது ரிட் மனுவை தெலுங்கானா தலைமை செயலர் சாந்திகுமார் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
தெலுங்கானாவில் ஆளுநராக முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் பொறுப்பில் இருந்து வருகிறார். இவர் மீது தெலுங்கானா அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.
சட்ட மசோதா :அதாவது , அங்கு தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி கட்சி சார்பாக கே.சந்திரசேகர ராவ் முதல்வராக இருக்கிறார். அங்கு சட்டசபையில் நிறைவேற்றப்படும் சட்டமசோதாக்களுக்கு ஆளுநர் தமிழிசை கையெழுத்திடாமல் இருந்து வருகிறார் என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு :இந்த சட்ட மசோதாக்களுக்கு, ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கையெழுத்திடாததால், அவர் மீது ரிட் மனுவை தெலுங்கானா தலைமை செயலர் சாந்திகுமார் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
மசோதா நிலுவை :அதில், முனிசிபல் திருத்த மசோதா உட்பட 10 சட்ட மசோதாக்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, கடந்த செப்டம்பர் மாதம் முதலே நிலுவையில் இருக்கிறது. அந்த மசோதாக்கள் மீண்டும் அனுப்பி வைக்கப்படும் எனவும், அதற்கு ஆளுநர் மறுப்பு கூற முடியாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற விசாரணை :மேலும், ஆளுநரின் செயல் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான செயல் என குறிப்பிட்டு, சட்ட மசோதாகளுக்கு விரைவில் கையெழுத்திட உத்தரவிட வேண்டும் என கூறி மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இந்த மனு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.