பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் மீது வழக்கு!

A Bihar-based social activist has filed a case against Union Petroleum Minister Dharmendra Pradhan over the rise in petrol and diesel prices in India.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதை கண்டித்து பீகாரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.

பீகார் நீதிமன்றத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீது பீகாரை சேர்ந்த சமூக ஆர்வலர் தமன்னா ஹாஸ்மி என்பவர் வழக்கு பதிவு செய்துள்ளார். இந்த வழக்கு முசாபர்பூரில் உள்ள தலைமை நீதித்துறை நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கைத் தொடர்ந்த தமன்னா ஹஸ்மி அவர்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வதில் சதி நடப்பதாக குற்றம் சாட்டியதுடன் கச்சா எண்ணெயின் விலை மிக குறைவாக உள்ளது என்பதையும் குறிப்பிட்டுள்ளார். மேலும், பெட்ரோல் டீசல் விலை உயர்வு நாட்டு மக்களை பயமுறுத்துவதுடன், கோபமடைய செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.